பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் தொடர்பில் சபாநாயகரால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சபாநாயகர் இது தொடர்பான முறைப்பாட்டை எழுத்து மூலம் பொலிஸ் மா அதிபரிடம் சமர்ப்பித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த விசாரணைகள் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (18) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு பி அறிக்கையின் மூலம் விடயங்களை அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் உடனடியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இதுபோன்ற அறிவிப்புக்களை தயாரிப்பவர்கள், பகிர்பவர்கள், மற்றும் இவ்வாறான கணக்குகளை நிர்வகிப்பவர்கள் என அனைவரையும் விசாரணையில் கண்டறிந்து அவர்கள் அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.