ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த ஒரு தலைவரும் நாட்டை விட்டு வெளியேறவில்லை என அக்கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய தலைவர்கள் கடந்த 9ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகளில் உண்மையில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மேலும் தெரிவித்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் கட்சியின் உயர்பீட தலைவர்கள் தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டிலேயே தங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.