ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இன்று (16) கூடியது.

இடைக்கால ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்னதாக அறிவித்திருந்தார் என்பதோடு, இது தொடர்பான பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பவற்றின் நாடாளுமன்றக் குழுவால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த தீர்மானம் இன்று மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பான முன்னோக்கிய நடவடிக்கைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அரசியல் கட்சிகளுடன் மேலும் பல கலந்துரையாடல்கள் இன்று நடைபெறவுள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.