ஆயிரம் பேர் கூடியிருந்த ஒரு  நிகழ்வில் ஒரு பேச்சாளர் 1000 ரூபாய் நோட்டைக்காட்டி இது யாருக்கு வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அனைவரும் தமது கருத்துக்களை பகிர்ந்து கைகளை உயர்த்தினார் கள்.
சற்று நேரத்திற்கு பிறகு தனது விரல்களால் 1000 ரூபாய் நோட்டை கசக்கி விட்டு இப்போது கூறுங்கள் இது யாருக்கு வேண்டும்.

மீண்டும் அனைவரும் தமது கைகளை உயர்த்தினார்கள்.

மீண்டும் சற்று நேரத்திற்கு பிறகு அதே நோட்டை தனது காலால் மிதிக்கிறார் அவ்வாறு மிதிக்கப்பட்ட நோட்டை காண்பித்து இது யாருக்கு வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மறுபடியும் அனைவரும் தமது கைகளை உயர்த்தினார்கள்.

வேறும் 1000 ரூபாய் நோட்டை கசக்கி, பிழிந்து, மிதித்து,அமுக்கடைய வைத்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை.

மனிதர்களாகிய நாம் தான் துயரங்களின் போதும், அவமானம் ஏற்படுகின்ற போதும் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கின்றோம்.

நம்முடைய மதிப்பு எப்போதும் குறைவதில்லை.நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள்.

*வாழ்க்கை என்ற பயிருக்கு தன்னம்பிக்கை தான் உரமாகும்*

*பாத்திமா நலீபா*
*உளவியல் எழுத்தாளர்* ✍️

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.