ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யவுள்ள நிலையில் ஏற்படவுள்ள வெற்றிடத்தை பிடிப்பதற்கு மூவர் போட்டியிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கட்சியின் கட்டுப்பாட்டு செயலாளர் ரேணுக பெரேரா, தென் மாகாண ஆளுநர் விலீ கமகே மற்றும் எஸ்.அமரசிங்க ஆகியோர் அந்த இடத்தை பிடிப்பதற்கு முயற்சி செய்து வருவதாகவும், அதற்காக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிடம் பலரை அனுப்பி கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.