செஸி எனப்படும் அடிச்சட்ட இலக்கம் மூலம் QR முறைமையை பதிவு செய்ய முடியாத வாகன பயனர்கள், இப்போது முதல் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் அல்லது தற்காலிக வாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி பதிவு செய்ய முடியும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் நேற்றைய தினம் 746 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR முறைக்கமைய எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்றிரவு 8.30 மணி வரை நாட்டில் உள்ள 1,060 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் QR முறையை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.