அலரி மாளிகையின் ஊடகப் பிரிவில் இருந்த உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு கொள்ளுப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.

ஊடகப் பிரிவில் இருந்த இரண்டு மடிக்கணினிகள், வீடியோ கெமரா மற்றும் ஏனைய கெமரா உபகரணங்கள் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க அவர்கள் பிரதமராக பதவியேற்றதன் பின்னர் அலரி மாளிகையில் வசிக்கவில்லை எனவும், பிரதமரின் ஊடகப் பிரிவின் ஒரு பகுதியை மாத்திரம் அங்குள்ள கட்டிட வளாகத்திற்கு மாற்றியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 9ஆம் திகதி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அலரி மாளிகைக்குள் பிரவேசித்ததன் பின்னரே இவ்வாறு உபகரணங்கள் காணாமல் போயுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் அலரி மாளிகையின் சுவர்களுக்கு இடையில் பெரிய துளைகள் போட்டப்பட்டுள்ளன. கதவுகள் உடைக்கப்பட்டு ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவுட் ஊடகப்பிரிவு முறைப்பாட்டில் தெரிவித்துள்ளது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.