இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் இன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

வாக்குச் சீட்டு இரகசிய வாக்கெடுப்பு என்பதால் அதனை காட்சிப்படுத்துவது அல்லது புகைப்படம் எடுப்பது குற்றமாகும் என்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் பிரிவு மணியை பாரம்பரியமாக ஐந்து நிமிடம் அடித்த பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்குப்பதிவு தொடங்கும் முன் காலியான வாக்கு பெட்டி எம்.பி.க்களுக்கு காண்பிக்கப்பட்டது.   வாக்குப்பெட்டிகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.