'லேக் ஹவுஸ்' அமைந்துள்ள காணி மற்றும் கட்டடத்தை ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்காக முதலீட்டாளர் ஒருவருக்கு விற்பனை செய்வதற்கு வெகுசன ஊடக அமைச்சுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லேக் ஹவுஸ் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலுள்ள சிக்கல்கள் மற்றும் கடனை செலுத்துவதிலுள்ள சிக்கல்களை தீர்ப்பதற்காக மேற்படி நடவடிக்கையை எடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கிடைக்கின்ற நிதியின் மூலம் கொழும்பில் வேறொரு இடத்தில் லேக் ஹவுஸ் நிறுவனத்தை அமைப்பதற்கு அல்லது அதனை கலைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

லேக் ஹவுஸ் அமைந்துள்ள காணி 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அதன் காலம் அடுத்த வருடம் நிறைவடைகிறது. லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஜனாதிபதி ரணிலின் பாட்டனாரான டீ.ஆர்.விஜயவர்தன ஆவார். - Siyane Newsகருத்துரையிடுக

Blogger இயக்குவது.