போட்டிக் களத்தில் இறங்கினார் அநுர குமார திசாநாயக்க

  Fayasa Fasil
By -
0

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள வாக்கெடுப்பில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க போட்டியிடவுள்ளார் எனவும் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஜேவிபியின் எம்.பியான விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோரும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மக்கள் விடுதலை முன்னணி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)