மக்கள் விருப்பத்தின் திரிபடைந்த பிரதிபலிப்பையே இந்த பாராளுமன்றம் வெளிக்காட்டியுள்ளது 

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர திசாநாயக்க

(2022.07.20)

புதிதாக தெரிவுசெய்யப்பட்ட புதிய ஜனாதிபதிக்கு நான் முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் அவரது பணிகளை முறைப்படி ஈடேற்ற வாய்ப்பு கிடைக்கட்டுமாக என வாழ்த்துகிறேன். பாராளுமன்றத்தின் ஒருவிதமான பலம்பொருந்திய ஒன்றுக்கொன்று முரணான  அரசியல் பாசறை உருவாகி இருக்கின்றது. அந்த பாசறையுடன் கருத்தியல்ரீதியான செயற்பாட்டினை மாற்றியமைப்பதற்காக இடையீடு செய்யவேண்டுமென்ற  திடசங்கற்பத்தையும் தேவையையும் இந்த வாக்கெடுப்பின் பெறுபேறுகள் சுட்டிக்காட்டுகின்றன. அந்த சவாலை ஏற்றுக்கொள்ளத் தயார் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த வேட்பாளர்கள் ஒரு விசித்திரமான கலவையாகும். ஐமச தலைவரால் மொட்டின் பொருளாளர் முன்மொழியப்படுகிறார். அதை ஜீ.எல். அவர்கள் வழிமொழிந்தமையால் மொட்டின் தலைவர் அணி என பொதுவாக கூறப்படுகின்றது. ரனில் விக்கிரமசிங்கவின் பாடசாலை நண்பனான பழைய இடதுசாரி குடும்பத்திலிருந்து விளங்கி வருகின்ற தினேஷ் குணவர்தன அவர்களின் முன்மொழிவின்படி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் முன்மொழியப்படுகிறார். அது மொட்டின் செயலாளரது அணியைப் போன்றது. செயலாளர் மீது ஏதேனும் வேதாளம் ஏறியுள்ளதுபோல் நாங்கள் காண்கிறோம். அதுதான் அரசியல்.

அந்த இரண்டு பாசறைகளுக்குமிடையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. நான் எமக்கே தனித்துவமான எமது கொள்கைகளை மையமாகக்கொண்டு போட்டியிட்டேன். இது எவ்விதத்திலும் நான் திகைப்படைகின்ற எதிர்பாராத பெறுபேறு எனக் கருதப்போவதில்லை. இன்று எமது நாட்டின் பாராளுமன்றத்தின் உள்ளடக்கத்தின் இயல்பு இதுதான். இன்று உண்மையாகவே மண்ணில் நிலவுவது இந்த எண்களுக்குள் சுட்டிக்காட்டப்படுகின்ற உள்ளடக்கமன்று.  மக்களின் நியாயமான விருப்பத்தின் பிரதிபலிப்பு இந்த பாராளுமன்றத்தில் வெளிப்பட்டதென எவராவது கூறுவார்களாயின் அது முற்றாகவே ஒரு மாயையாகும். இந்த பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது மக்களின் விருப்பத்தின் திரிபுநிலையின் பிரதிபலிப்பாகும். வெளியிலுள்ள மக்களுக்கும் இந்த சபையில் இருக்கின்ற உங்களுக்கும் இடையில் பாரிய முரண்பாட்டுநிலை உருவாகி இருக்கின்றது. ஆனால் இதைவிட எதையுமே நான் இந்த பாராளுமன்றத்தில் இருந்து எதிர்பார்ப்பதில்லை.

இந்த நிலைமை தோன்றியதும் உடனடியாக நாங்கள் அனைத்து அரசியல் குழுக்களையும் சந்தித்தோம். சனாதிபதி பதவி, பிரதமர் பதவிக்காக எதிர்கால அரசியல் அதிகாரக் கருத்திட்டத்துடன் தொடர்பற்ற இருவரை தெரிவுசெய்வோமென முன்மொழிந்தோம். ஒருதடவை சபாநாயகரின் பெயரும் முன்மொழியப்பட்டது. பிரதமர் பதவிக்காக வடக்கைச்சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரமனின் பெயர் முன்மொழியப்பட்டது. இத்தகைய நெருக்கடியின்போது அது எமது நாட்டுக்கு எடுக்கக்கூடிய  சிறந்த முன்மாதிரியாக அமைந்திருக்கும். மதிப்பளிக்கும் வகையில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் றஊப் ஹக்கீம் அவர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின்போது இந்த இரண்டு பதவிகளையும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற பெண்கள் இருவருக்கு வழங்க முன்மொழியப்பட்டது. அவ்வாறான ஒரு நெருக்கடியின்போது அல்லாமல் இத்தகைய முன்மாதிரியான பொறுப்பினைக்கொண்ட ஒரு வாய்ப்பினை பொதுத்தேர்தலின்போது உருவாக்கிவிட முடியாது. எதிர்கால அரசியல் நோக்கமற்ற மற்றும் ஒரு பதவியை வடக்கின் அரசியலை பிரதிநிதித்துவம் செய்கின்ற பாராளுமன்ற உறுப்பினரொருவருக்கு வழங்க முடியுமானால் இந்த சபை பற்றி நாட்டில் உருவாகின்ற நன்மதிப்பும் நம்பிக்கையும் எப்படிப்பட்டதாக அமையும்? பாராளுமன்ற உறுப்பினர் றஊப் ஹக்கீம் முன்மொழிந்தவாறு இந்த இரண்டு பதவிகளுக்காகவும் பெண்கள் இருவரை நியமித்துக்கொள்ள இயலுமானதாக அமைந்திருந்தால் நாங்கள் அதற்கு முழுமையாகவே ஆதரவுடையவர்களாக இருந்திருப்போம். அது இந்த நாட்டுக்கு எவ்வளவு முன்மாதிரியாக அமைந்திருக்கும்? எதிர்கால அதிகாரக் கருத்திட்டத்துடன் தொடர்பற்ற அத்தகைய அரசாங்கமொன்றின் அமைச்சர் பதவியையும் பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ள தயார் என்பதை நாங்கள் கூறினோம்.

 அதைப்போலவே இடைக்கால ஆட்சி குறுகிய காலத்திற்காக மாத்திரம் வலுவுடையதாக அமையவேண்டுமென்ற நிபந்தனை இருந்தது. நாங்கள் ஏன் அத்தகைய முன்மொழிவினை செய்தோம்? இன்று நாடு கூறுவதென்ன? நாடு பாரிய அனர்த்தத்திற்கு இலக்காகி உள்ளது. மக்கள் வரிசைகளில் மடிகிறார்கள். பிள்ளைகளுக்கு பால் மா கிடைக்காத நெருக்கடி நிலவுகின்றது. கமக்காரர்கள் வயல்களைப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார்கள். மீனவர்கள் படகுகளைப் பார்த்துக்கொண்டு கவலையுடன் வசிக்கிறார்கள். இளைஞர் தலைமுறையினர் எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்பு சிதைந்த நிலையில் இருக்கிறார்கள். பிள்ளைகளின் கல்விக்கு என்ன கதி நேரிடுமென வேதனையுடன் இருக்கிறார்கள். அத்தகைய தருணமொன்றில் உயர் பதவிகள் இரண்டும் எதிர்கால அதிகாரக் கருத்திட்டங்களற்ற மற்றும் ஒருங்கிணைந்த அமைச்சரவை மூலமாக குறுகிய காலமொன்றுக்காக நாட்டை ஆட்சிசெய்வதற்கான அளப்பரிய வாய்ப்பு பாராளுமன்றத்திற்கு உருவாகியது.

எமது அந்த முன்மொழிவில் இரண்டு விடயங்கள் பொதிந்திருந்தன. அந்த முன்மொழிவு யதார்த்தமாக மாறுமாயின் அமைச்சரவை பத்து பேருக்கு மட்டுப்பட்டதாக  அமையவேண்டுமென்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருந்தோம். கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களால் அந்த பத்து அமைச்சர் பதவிகளும் தயாரிக்கப்பட்டிருந்தன. அதைப்போலவே காலவரையறை இருக்வேண்டுமென்ற முன்மொழிவும் இருந்தது. இந்த அடிப்படை உட்பொருளைக்கொண்ட முன்மொழிவு தோல்வியடைந்தது.  அந்த முன்மொழிவு தோல்வியடைந்ததும் உருவாகியுள்ள இந்த நிலைமையின் மத்தியில் பெற்றுக்கொள்ளக்கூடிய உன்னதமான பெறுபேறு, உன்னதமான முன்மாதிரி, உன்னதமான இடையீட்டினை இந்த பாராளுமன்றத்தில் பிறப்பிக்க முயற்சிசெய்தாலும் அது தோல்வியடைந்தது. அதன்பின்னர் எமது கொள்கை, அடையாளம், எங்கள் வேலைத்திட்டத்தை அடிப்படையாகக்கொண்டதாக நான் வேட்பாளராக முன்வந்தேன். அவ்வாறு முன்வந்த வேளையிலேயே அதன் பெறுபேறு என்னவென்பதை நான் அறிந்திருந்தேன். அது ஒருபோதும் திகைப்படையச் செய்விக்கின்ற பெறுபேறு அல்ல. பாரிய பரபரப்பை ஏற்படுத்த ஏதுவாக அமைகின்ற பல சம்பவங்கள் இந்த சபாமண்டபத்தில் இடம்பெற்றுள்ளன.  தமிழ் தேசிய கூட்டமைப்பும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெருமவின் அணியாக வெளிப்பட்டது. அதைப்போலவே அந்த அணியில் பத்து கட்சிகள் இருப்பதாக வெளிபடுத்தப்பட்டது.  ஸ்ரீலங்கா சதந்திரக் கட்சியும் இருப்பதாக வெளிப்படுத்தப்பட்டது.  ஐமச அவ்வாறு வெளிப்படுத்தியது. பார்த்தால் குழுக்களின் அளவிலேயே 113 ஐ விஞ்சி செல்லக்கூடியதாக இருக்குமென நினைக்கத் தோன்றுகின்றது.

ஆனால் அவ்வாறு வெளிப்படுத்தியவற்றுக்குள் இந்த அங்கத்தவர்களும் குழுக்களும் அந்த முடிவிலேயே இருக்கிறார்களா?   அந்த முடிவிலேயே  தங்கியிராதது கொள்கைரீதியான விடயங்களின் பேரில் மாத்திரமா? அந்த முடிவுகளில் தங்கியிராமல் இருப்பது கொள்கைரீதியான விடயங்களின்பேரில் மாத்திரமல்ல என நான் நம்புகிறேன்.  இந்த பாராளுமன்ற வரலாற்றில் மிகவும் தீர்வுக்கட்டமான சந்தர்ப்பங்களில், 18 வது திருத்தத்தின்போது, 52 நாட்கள் சூழ்ச்சி நடைபெற்ற தருணத்தில், 20 வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்குமிங்கும் விலைபோன வரலாறு இருக்கின்றது.  ஊர்களில் தேக்கு மரத்தின் சுற்றளவுக்கு அமைய விலை கூறுவதைப்போல் பாராளுமன்ற உறுப்பினர்கள் விற்கப்படுகிறார்கள். இதுவும் அப்படித்தான் என நான் நினைக்கிறேன்.  யாராவது இல்லையெனக் கூறலாம். அதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். (குறுக்கீடு) இது என்னுடைய கருத்து. இவ்விதமாக பதற்றமடைவார்கள் என்பதையும் நான் அறிவேன். இந்த விடயத்தை இங்கு கூறாவிட்டால் வேறு எங்கு கூறுவது? ஊருக்குப்போய் சந்திதோறும் கூறுவதில் பலனில்லை. இவர்களுக்கு முகத்திற்கே இதனைக் கூறவேண்டும். அத்தகைய அநாகரிகமான நிலையை அடைந்துள்ள பாராளுமன்றமே இது.  இந்த பாராளுமன்றத்தின் வரலாறு அத்தகைய அநாகரிகமான நிலையை அடைந்துள்ளது. அத்தகைய அநாகரிகமான மனிதர்களால் இந்த பாராளுமன்றம் நிறைந்துள்ளது. அந்த அநாகரிகத்தின் பிரதிபலிப்பு இந்த பாராளுமன்றத்தில் இடம்பெறவில்லை என நான் நம்பப்போவதில்லை.

 அது வரலாற்றில் குறிக்கப்படவேண்டிய விடயமென நான் ஏற்றுக்கொள்வதாலேயே அதனை நான் குறிப்பிடுகிறேன். தேவையானவர்கள் எனது கருத்தினை நிராகரியுங்கள். ஆனால் நான் எவ்விதத்திலும் அதனை நிராகரிக்கப் போவதில்லை. இந்தப் பாராளுமன்றம் இனிமேலும் மக்களின் விருப்பத்தின் நியாயமான பிரதிபலிப்பு அல்ல. இந்த பாராளுமன்றத்தில் நிலவுவது மக்கள் விருப்பத்தின் திரிபுநிலையின் பிரதிபலிப்பாகும். அதனால் இந்த பாராளுமன்றத்தில் கட்டியெழுப்பப்படுகின்ற  எந்தவொரு வகையைச் சேர்ந்த அரசாங்கத்திற்கும் நீண்டகாலம் நாட்டை ஆட்சிசெய்வதற்கான பரிசுத்தமான தன்மை இருக்குமென நான் நம்பப்போவதில்லை. எனவே வெகுவிரைவில் புதிய மக்கள் ஆணைக்கு வாய்ப்பினை வழங்கவேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு நான் முடித்துக்கொள்கிறேன்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.