இலங்கையின் கொழும்பில் நாளை (09) சனிக்கிழமையன்று ஒரு பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கை அதிகாரிகள், நாட்டின் பொலிஸார் நிதானத்தை பேணவும், வன்முறையைத் தடுக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் உறுதிப்படுத்தவேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் கோரியுள்ளார்.

அதே நேரத்தில், போராட்டங்களை ஏற்பாடு செய்வோர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுமாறும், அத்தியாவசிய மருத்துவ அல்லது மனிதாபிமான சேவைகளுக்கு இடையூறு விளைவிக்காமல் இருக்குமாறும் கேட்டுக்கொள்வதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் செய்தித் தொடர்பாளர் ரவினா ஷம்தாசனி அறிக்கை ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.