உடன் அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த ஊரடங்கு உத்தரவானது மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்தோடு, வன்முறையை தூண்டும் வகையில் செயற்படுவோரையும், வாகனங்களை பயன்படுத்துவோரையும் உடனடியாக கைது செய்யுமாறும் பொலிஸாருக்கு பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.