ஒரு இலட்சத்து இருபதாயிரம் வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் இன்று சந்தைக்கு விநியோகிக்கப்படும்

  Fayasa Fasil
By -
0
ஒரு இலட்சத்து இருபதாயிரம் வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் இன்று சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, லிட்ரோ எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக மே மாதத்திற்கான மின்சார கட்டணத்தை சமர்ப்பிக்குமாறு அந்த நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பியதன் பின்னர், அது அவசியமில்லை என அந்த நிறுவனத்தின் விளம்பர முகாமையாளர் பியல் ஹெட்டிகே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சனிக்கிழமை இரவு மேலுமொரு எரிவாயு கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)