நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையையடுத்து. எதிர்காலத்தில் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை 50 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை சுமார் 200 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டிய போதிலும், மக்கள் படும் இன்னல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி 50 ரூபாவினால் மட்டுமே விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்தோடு எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட 140 இடங்களில் 140,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.