நாட்டின் அமைதியை நிலைநாட்டுவதற்கு இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு ஆதரவளிக்குமாறு நாட்டு மக்களிடம் முப்படையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது குறித்து பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அமைதியான முறையிலும் அரசியலமைப்பின் பிரகாரம் தீர்த்து வைப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ள இத்தருணத்தில், நாட்டின் அமைதியை நிலைநாட்டுவதற்கு இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு ஆதரவளிக்குமாறு  மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.