இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் புதிய பிரதமர் தினேஷ் குணவர்தனவை இன்று சந்தித்தார்.

இந்தச் சவாலான காலகட்டத்தில் இலங்கை மக்களுக்கு அமெரிக்கா எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பது குறித்து புதிய பிரதமருடன் கலந்துரையாடியதாக அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் உட்பட பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் மீளக் கட்டியெழுப்புவதற்கும் உழைக்கும் போது, ​​நாட்டின் தலைவர் ஒருவர் சட்டம் மற்றும் நீதியின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கான வழிமுறைகளை அணுகுவது கட்டாயமாகும் என்று அவர் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் அவர் கூறியுள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.