லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் இன்று(17) இரவு 10 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை குறைத்துள்ளது.

அதனடிப்படையில் 92 ஒக்டேன் வகை பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 450 ரூபாவாகும்.

அத்துடன் 95 ஒக்டேன் வகை பெட்ரோலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 540 ரூபாவாகும்.

இதேவேளை ஒட்டோ டீசலின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 440 ரூபாவாகும்.

மேலும் சுப்பர் டீசலின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 510 ரூபாவாகும்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.