ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களும் மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களை அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கு காவல்துறை பொதுமக்களின் உதவியினை கோரியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான தகவல்களை 0718-594950 அல்லது 071-8594929 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அறிவிக்க முடியும் என காவல்துறை அறிவித்துள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.