IMF இடமிருந்து இலங்கையர்களுக்கு மகிழ்ச்சிகர செய்தி

  Fayasa Fasil
By -
0

இலங்கையை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான பேச்சுவார்த்தையை விரைவில் நிறைவிற்கு கொண்டுவரவிரும்புவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியத்தின்முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜியாவா  இதனை தெரிவித்துள்ளார்.

டோக்கியோவின் நிக்கேய் ஏசியாவிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அந்நிய செலாவணி முற்றாக தீர்ந்துபோயுள்ள நிலையில் எரிபொருள் உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களிற்கான கடும் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள  இலங்கை மக்கள் நலன்கள் குறித்து ஆழ்ந்த கரிசனை  கொண்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விரக்தியடைந்துள்ள மக்கள் தங்கள் சீற்றத்தை அரசாங்கத்தை நோக்கி திருப்பியுள்ளனர் கடன்மறுசீரமைப்பிற்கான எதிர்பார்ப்புகளை மழுங்கடித்துள்ளது, முன்னர் வலுவானவராக காணப்பட்ட ஜனாதிபதியை தலைமறைவாக செய்துள்ளது, புதன் கிழமை அவரின் இடத்திற்கு இலங்கை நாடாளுமன்றம் ரணில்விக்கிரமசிங்கவை தெரிவு செய்துள்ளது.

தற்போது அரசாங்கமொன்றுள்ள நாங்கள் எங்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கலாம், எங்கள் குழுவினர் அங்கு செல்வார்கள் என தெரிவித்துள்ள சர்வதேச நாணயநிதியத்தின்முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜியாவா  நாங்கள் முன்னரே சிறந்த தொழில்நுட்ப நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதால் இலங்கையி;ல் தொழில்நுட்ப குழு ஏற்கனவே காணப்படுவதால் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை  கூடிய விரைவில்  பூர்த்தி செய்யலாம் என நம்பிக்கை கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

விக்கிரமசிங்க சர்வதேச நாணயநிதியத்திற்கு புதியவர் இல்லை நிதியமைச்சர் மற்றும் ஆறுதடவை பிரதமர் என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தைகளி;ல் அவர் சம்பந்தப்பட்டுள்ளார், ஆனால் மக்கள் மத்தியில் அதிகளவு செல்வாக்கற்றவராக அவர் காணப்படுகின்றார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)