இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயரை முன்மொழிய பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளது.

கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த பிரேரணையை சமர்ப்பித்ததாகவும், அதனை கட்சியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று பிற்பகல் நடைபெற்ற பாராளுமன்றக் குழுவில் உறுதிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்திக்கு பாராளுமன்றத்தில் கிட்டத்தட்ட 50 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது இந்த நிலையில் வாக்கெடுப்பில் வெற்றிபெற அவர்களுக்கு 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.