நீதிமன்ற உத்தரவை மீறி, காலி முகத்திடலில் உள்ள முன்னாள் பிரதமர் SWRD பண்டாரநாயக்கவின் உருவச் சிலைக்கு அருகில் நின்று கொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக இவர்கள் கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி முகத்திடல், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக, பண்டாரநாயக்க சிலை அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீற்றர் சுற்றுப்புறத்தில், எந்தவொரு தரப்பினரும் பிரவேசிக்கக் கூடாது என கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, கடந்த 20ஆம் திகதி உத்தரவைப் பிறப்பித்தார்.

சிலையை சேதப்படுத்துவதற்கான, திட்டமொன்று இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கோட்டை காவல் நிலைய அதிகாரிகள் விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.