கஹட்டோவிட்ட YMMA ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சிரமதானம்

Rihmy Hakeem
By -
0

 நாளைய (25) டெங்கு ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கஹட்டோவிட்ட முஸ்லிம் வாலிபர் சங்கத்தின் (YMMA) ஏற்பாட்டில், கஹட்டோவிட்ட பிரதேசத்திற்குள் நுழையும் வீதியை துப்பரவு செய்யும் முதற்கட்ட சிரமதான பணி வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அல்ஹாஜ் பிர்தவ்ஸ் தெரிவித்தார்.

இதன் போது பிரதேச இளைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

எரிபொருள் பிரச்சினை காரணமாக பல இளைஞர்கள் பங்குபற்றமுடியவில்லை எனினும் எதிர்வரும் நாட்களில் தமது பங்கேற்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

நிகழ்வில் சுகாதார உத்தியோகத்தர் கஹட்டவிட்டவுக்கு தனது கடமைக்கு செல்லும் வழியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 







கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)