பேராதனை பாலத்திலிருந்து மஹாவலி ஆற்றில் பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக் கொண்ட பேராதனை பல்கலைக்கழக மாணவனின் சடலம், இன்று (31) பகல் மீட்கப்பட்டுள்ளது.

மஹாவலி ஆற்றின் கன்னொருவ- சீமாமாலகய பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் 3ஆம் ஆண்டில் கல்வி கற்று வந்த, பெல்மடுல்ல பகுதியைச் சேர்ந்த 24 வயதான குறித்த இளைஞன், 27ஆம் திகதி மாலை பேராதனை பாலத்திலிருந்து ஆற்றிக்குள் பாய்ந்துள்ளார்.

உயிரிழந்த மாணவனின் மரணத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்றும் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamilmirror

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.