A relative carries the body of five-year-old Alaa Qaddoum who was killed by an Israeli air raid on the Gaza Strip on August 5, 2022 [Hosam Salem/Al Jazeera]

பலஸ்தீனின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடாத்திய ராக்கெட் தாக்குதல்களில் 5 வயது பெண் குழந்தை  உட்பட குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் பலஸ்தீனை சேர்ந்த 19 பேரை இஸ்ரேல் கைது செய்துள்ளது. 

பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் குழுவின் உறுப்பினர் ஒருவர் இவ்வார ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டதனை தொடர்ந்து அந்த அமைப்பின் உடனடி அச்சுறுத்தல் வந்ததினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். 

தாக்குதல்கள் இரண்டாவது நாளாகவும் (06) தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. 

பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத், இஸ்ரேல் மீது நூற்றுக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை "ஆரம்பகட்ட எதிர்வினையின்போது" வீசியது.

பெரும்பாலானவை இஸ்ரேலின் அயர்ன் டோம் ஏவுகணை பாதுகாப்புக் கவசத்தால் தடுக்கப்பட்டன. பல இஸ்ரேலிய நகரங்களில் சைரன் ஒலிகள் கேட்டன.

இதற்குப் பிறகு, வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் போராளிகளின் தளங்களைக் குறிவைத்து தாக்குதலை மீண்டும் தொடங்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) கூறியது.

முந்தைய நாளின் ஒரு தொலைக்காட்சி உரையில், பிரதமர் யாயீர் லப்பீட், "இஸ்ரேல் உடனடி அச்சுறுத்தலுக்கு எதிராகத் துல்லியமான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டது," என்றார்.

பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத்துடன் (PIJ) தொடர்புடைய தளங்களைத் தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறியது. அவற்றில், உரத்த குண்டுவெடிப்பு சத்தத்தோடு வெடித்த, காஸா நகரில் உள்ள உயரமான பாலஸ்தீன கோபுரமும் அடங்கும்.

தாக்குதல் தொடங்கியதிலிருந்து கொல்லப்பட்டவர்களில் தைசீஸ் ஜபாரி உட்பட 4 பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தினர் மற்றும் ஐந்து வயது குழந்தையும் அடக்கம் என்று உள்ளூர் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் 55 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர், இஸ்ரேல் பாதுகாப்புப் படை "சுமார் 15 போராளிகள்" கொல்லப்பட்டதாகத் தான் கருதுவதாகக் கூறினார்.

இஸ்ரேலின் உள்துறை அமைச்சர் அயிலெட் ஷகீத், சேனல் 12 நியூஸிடம், "இது எப்படி முடியும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இது முடிவுக்கு வர அதிக காலம் ஆகலாம். இதுவொரு நீண்ட மோதலாக கடினமான ஒன்றாக இருக்கலாம்," என்றார்.

ஈரானிய தலைநகர் தெஹ்ரானுக்குப் பயணித்தபோது பேசிய பலஸ்தீன பொதுச் செயலாளர் ஜியாத் அல்-நகாலா, "இந்த ஆக்கிரமிப்புக்கு நாங்கள் வலுவாக பதிலடி கொடுப்போம். எங்கள் மக்கள் வெற்றி பெறக்கூடிய ஒரு சண்டையாக அது இருக்கும்," என்றார்.

"இந்தப் போரில் பேச்சுவார்த்தைக்குரிய எல்லைகள் இல்லை. மேலும் டெல் அவிவ் எதிர்ப்பின் ராக்கெட்டுகளுக்குக் கீழே இருக்கும்," என்றார்.

இதற்கிடையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ், ஆயுதக் குழுக்கள் போரில் "ஒற்றுமையாக" இருப்பதாகவும் அவர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளது.

திங்கள் கிழமையன்று இரவு, மேற்குக் கரையில் பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத்தின் தலைவர் என்று கூறப்படும் பாஸ்ஸெம் சாதியை இஸ்ரேல் கைது செய்தது. 17 இஸ்ரேலியர்கள் மற்றும் இரண்டு யுக்ரேனியர்களை கொன்ற இஸ்ரேலிய அரேபியர்கள் மற்றும் பாலத்தீனியர்களின் தாக்குதல்களுக்குப் பிறகு, தொடர்ச்சியான கைது நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அவர் ஜெனின் பகுதியில் கைது செய்து வைக்கப்பட்டார். தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் ஜெனின் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

பாஸ்ஸெம் சாதி கைது செய்யப்பட்ட பிறகு, இஸ்ரேல் காஸாவுடனான அதன் எல்லைக்கு அருகிலுள்ள சமூகங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்தது. பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களைத் தாக்கும் கொண்டது என்று எச்சரித்தது. சாலைகள் மூடப்பட்டதால், தெற்கு இஸ்ரேலில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்கள் முடங்கின.

ஈரானால் ஆதரிக்கப்படும் பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத்தின் தலைமையகம் சிரியாவின் டமாஸ்கஸில் உள்ளது. இது காஸாவில் இருக்கும் வலிமையான போராளிக் குழுக்களில் ஒன்று. இஸ்ரேலுக்கு எதிரான ராக்கெட் வீச்சு, துப்பாக்கிச் சூடு உட்பட பல தாக்குதல்களை இது நடத்தியிருக்கிறது.

2019 நவம்பரில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் ஐந்து நாட்கள் மோதலில் ஈடுபட்டன. இஸ்ரேல் மீது உடனடி தாக்குதலைத் திட்டமிடுவதாகக் கூறிய அந்த அமைப்பின் தளபதியை இஸ்ரேல் கொன்றதைத் தொடர்ந்து சண்டை வெடித்தது. இந்த வன்முறையில் 34 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், 111 பேர் காயமடைந்தனர், 63 இஸ்ரேலியர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது.

கொல்லப்பட்ட பலஸ்தீனர்ளால் ராக்கெட்டுகளை ஏவத் தயாராகி வந்தவர்கள் உட்பட 25 பேர் போராளிகள் என்றும் இஸ்ரேல் கூறியது.

பிபிசி தமிழ், அல் ஜஸீரா

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.