'வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்' எனும் 100 நாட்கள் செயல்முனைவின் இருபத்தேழாம் நாள் போராட்டம் திருகோணமலை மாவட்டத்தின் வெருகல்  பிரதேசத்திலுள்ள மாவடிச்சேனையில் இன்று (27) இடம்பெற்றது. 

இப் போராட்டமானது மாவடிச்சேனை கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்திலிருந்து பேரணியாக ஆரம்பித்து மட்டக்களப்பு திருமலை பிரதான வீதி ஊடாக 'கௌரவமான அரசியல் உரிமை வேண்டும்','எங்கள் நிலம் எமக்கு வேண்டும';, 'நடமாடுவது எங்கள் உரிமை', 'பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை', 'ஒன்று கூடுவது எங்கள் உரிமை', 'அரசியல் கைதிகளை விடுதலை செய்', 'காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும';, 'படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும்' எனப் பல கோஷங்களுடன் பேரணியாக மாவடிச்சேனை பொது மைதானத்தினைச் சென்றடைந்தது. 




மற்றும் இம் மைதானத்தில் கூடிய வெருகல் பிரதேச மக்கள், மீனவ சங்கத்தவர்கள், விவசாய சம்மேளனத்தினர், பெண்கள், இளைஞர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில் சார் உபகரணங்களை காட்சிப்படுத்தி தங்களுக்கான பிரச்சினைகளை வெளிப்படுத்தியிருந்தார்கள். இங்கு கூடிய மக்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் சார்ந்தவர்கள் தங்களுக்கான பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய வகையில் ஒன்றாக தீபம் ஏற்றி இறைவனிடமும் வேண்டி தங்களின் கௌரவமான அரசியல் தீர்வு வேண்டி நின்றார்கள்.




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.