நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி தொகுதியொன்று செயலிழந்துள்ளதன் காரணமாக நாளை (16) முதல் ஒரு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டு நீடிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை மின்னுற்பத்தி தொகுதியை சீரமைக்க குறைந்தது 14 முதல் 16 நாட்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மின்வெட்டு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பானது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒப்புதல் கிடைத்ததும் வெளியிடப்படும்.

மேலும் இன்று ஒரு மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நீடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.