தாய்லாந்தில் இன்று (17) குறைந்தது 17 குண்டுத்தாக்குதல்கள் மற்றும் தீவைப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தின் தென்பகுதி மாநிலங்களான பட்டாணி, நரதிவட் மற்றும் யாலா ஆகிய மாநிலங்களில் குறித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனால் குறைந்தது மூன்று பொதுமக்கள் காயமடைந்துள்ளதுடன் தாக்குதலுக்கு எவரும் இதுவரை பொறுப்புக்கூறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. - Siyane News