சிறார்களின் போசாக்குக் குறைபாட்டின் அடிப்படையில் இலங்கை உலகளவில் 6 ஆவது இடத்திலும், தெற்காசியாவில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் நாடுகளில் 2வது இடத்திலும் உள்ளதாக UNICEF தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளமையினால் இலங்கையர்களின் உணவு முறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, பாதிக்கப்படக்கூடிய மற்றும் வறிய குடும்பங்களின் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் உள்ள குழந்தைகளில் அரைவாசிப் பேருக்கு மேல் ஏதாவது ஓர் அவசர உதவி தேவைப்படுவதாகவும், இலங்கையில் 4.8 மில்லியன் குழந்தைகளின் கல்வி இரண்டு ஆண்டுகளாக ஆபத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக குழந்தைகளின் கல்வி பல வழிகளில் தடைப்பட்டுள்ளதாகவும் யுனிசெப் சுட்டிக்காட்டியுள்ளது.

பாடசாலைகளில் சத்துணவுகள் கிடைப்பதில்லை, மாணவர்களுக்கு அடிப்படை எழுதுபொருட்கள் கிடைப்பது கடினமாகிவிட்டது, ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று ருNஐஊநுகு தெரிவித்துள்ளது.

இதேவேளை அதிகரித்து வரும் பொருளாதார அழுத்தத்தினால் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகள் அதிகரித்து வருவதாக யுனிசெப் குறிப்பிட்டுள்ளது..

தற்போதைய போக்கு தொடருமானால், குழந்தைகள் தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தலைகீழாக மாறுவதுடன், சில சந்தர்ப்பங்களில் நிரந்தரமாக இழக்க நேரிடும் என யுனிசெஃப் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.