முன்னணி அரகல செயற்பாட்டாளரான ரெட்டா என அழைக்கப்படும் ரதிந்து சேனாரத்னவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 50 இலட்சம் ரூபாவை வைப்பிலிட்ட நபரை கொழும்பு குற்றப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளார்.

ஜா -எலவில் அமைந்துள்ள தனியார் வங்கி கிளையொன்றிலுள்ள  ரதிந்து சேனாரத்னவின் சேமிப்பு கணக்கில் இந்தப் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேகநபர் நேற்று (17) குற்றப் பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த போதிலும், சந்தேகநபர் நேற்றைய தினம் அங்கு வருகை தந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பணம் வைப்பு செய்யப்பட்ட அதே நாளில், ரதிந்து சேனாரத்னவும் சம்பவம் குறித்து தனியார் வங்கியில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.