லக்ஷபான – போகரவாவில பிரதேசத்தில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட, 60 வயதுடைய பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வயோதிபப் பெண்ணும் 4 வயதான அவரது பேரப்பிள்ளையும் ஓடையொன்றை கடக்க முயன்றபோது, இருவரும் வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மேற்படி பெண், சிறுமியை பாடசாலையில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்லும்போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

காணாமல் போன சிறுமியை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.