- I. A. Cadir Khan -

   நாட்டில் கடந்த 7 மாதங்களில் சுமார் 6 இலட்சம் கடவுச் சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

   குடிவரவு மற்றும்  குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் பியுமி பண்டார, இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,     நாட்டில் முதல் ஏழு மாதங்களில் சுமார் 6 இலட்சம் கடவுச் சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

   கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில்,  147,192 கடவுச் சீட்டுக்களே விநியோகிக்கப்பட்டிருந்தன.

  இதேவேளை, கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளில் கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்காக,  101,777 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இவற்றில் 98,124 பேருக்கு மாத்திரமே,  கடவுச் சீட்டுக்களை வழங்க முடிந்துள்ளது.

   மத்திய வங்கியின் அண்மைய அறிக்கையின்படி, இந்த ஆண்டின் முதல் அறையாண்டில்,  140,701 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காகச் சென்றுள்ளனர்.

   எனினும், 2021 ஆம் ஆண்டில் 117,952 பேர் மட்டுமே வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காகச் சென்றுள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.