முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய மன்னிப்பின் பிரகாரம் அவருக்கு அரசியல் உரிமைகள் கிடையாது.

“ரஞ்சன் ராமநாயக்க 34 (1) சரத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மன்னிக்கப்பட்டுள்ளார், இது நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு, அரசியல் உரிமைகளுடன் முழுமையான ஜனாதிபதி மன்னிப்பைப் பெறுவதற்கு அரசியலமைப்பின் 34 (2) வது பிரிவின் கீழ் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்” என்று நீதி அமைச்சின் அதிகாரி ரகித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றுபிற்பகல் ரஞ்சன் ராமநாயக்கவுடன் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அரசியல் உரிமைகளுடன் கூடிய முழுமையான ஜனாதிபதி மன்னிப்பை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தார்.


ரஞ்சன் ராமநாயக்கவின் குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகளை உள்ளடக்கிய முழுமையான ஜனாதிபதி மன்னிப்பை ஜனாதிபதியும் அரசாங்கமும் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.