கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து வெளிநாட்டு சுற்றுப் பயணம் செல்ல தயாரான இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் 7 பேரின் பயணம் இடைநிறுத்தப்பட்டதாக தேசிய விளையாட்டு சபையின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கண்டி மல்வத்து, அஸ்கிரிய பீடங்களுக்கு சென்று தரிசனம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அர்ஜுன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் நிறுவனத்தைச் சேர்ந்த 7 அதிகாரிகள் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்ல அனுமதி கோரியிருந்தனர். அங்கு, அந்நாடுகளில் அவர்கள் உயர்மட்ட ஹோட்டல்களில் தங்குவதற்கான வசதிகளுடன் நாள் ஒன்றுக்கு 650 டொலர்கள் வழங்கப்பட இருந்தது. 

விளையாட்டு கவுன்சில் என்ற வகையில் நாங்கள் அதை எதிர்த்தோம். இவற்றைத் தடுத்து நிறுத்தும்போது நமக்குப் பிரச்சினைகள் வரும். சரியானதைச் செய்யவே இங்கு வந்தேன். அதனையே செய்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.