நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் முதலாம் அலகு செயலிழந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப ஊழியர்கள் சிக்கலை கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் கஞ்சன தெரிவித்துள்ளார்.

மேலும், இரண்டாவது அலகில் முன்னதாக திட்டமிடப்பட்ட திருத்தப்பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், தற்போது 3ஆவது அலகு தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும், மின் விநியோகத்தை நிர்வகிக்க பிற எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.