நாட்டில் நேற்று முன் தினம் (02) கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 8 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அவர்களுள் 60 வயதிற்கு மேற்பட்ட 3 ஆண்களும் மற்றும் 1 பெண்ணும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட 4 ஆண்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நேற்றைய தினம் மேலும் 122 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.