கல்கிஸ்ஸை நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணையொன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதி, நீதிமன்ற விசாரணை கூட்டில் இருந்த சந்தர்ப்பத்திலேயே துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தில் எவருக்கும், எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பிரதிவாதியை நோக்கி, இரண்டு தடவைகள் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்தும், துப்பாக்கி பிரயோகம் நடத்திய சந்தேகநபர், நீதிமன்றத்திற்குள் மற்றுமொரு துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.