பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஏழு வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ரஞ்சனுக்கு ஜனாதிபதியின் மன்னிப்பு முழுமையாக கிடைக்கவில்லை எனத்  தெரிவித்துள்ள அவர், தேவைப்பட்டால் அவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் சரத் பொன்சேகாவுக்கு இரண்டு தடவைகள் முழு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டதாகவும், முதல் தடவையாக தண்டனை இரத்து செய்யப்பட்டு பின்னர் அவருக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்த அமைச்சர், ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் அவ்வாறே நடக்கலாம் எனவும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.