மாகாணங்களுக்கு ஆளுநர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையில் பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆளுநர் பதவிகளுக்கு புதிதாக ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து தயா கமகே, ஜோன் அமரதுங்க, நவீன் திசாநாயக்க உள்ளிட்ட பலரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், பொதுஜன பெரமுன சார்பிலும் சிலரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. 

இந்நிலையில் ஏற்கனவே ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களை மாற்ற வேண்டாம் என்று அக்கட்சி கோரியுள்ள நிலையில் பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.