வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

  Fayasa Fasil
By -
0




சுற்றுலா விசாவில் மலேசியா சென்று  அந்நாட்டில் வேலை விசாவாக மாற்ற முடியும் என கூறி மோசடி நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..

இந்த நடவடிக்கையில் ஈடுபடும் ஆட்கடத்தல் கும்பலை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அவ்வாறான எந்தவொரு விசா நடைமுறையும் இல்லையெனவும்,  இவ்வாறான மோசடியாளர்களிடம் சிக்கவேண்டாம் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. .

அத்துடன், வெளிநாடு செல்வதற்கு முன்னர் தமது வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பான விழிப்புணர்வுக்காக பொலிஸார் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)