மின்கட்டண அதிகரிப்பு மக்களுக்கு சிரமமாக இருந்தாலும் சபையின் செலவீனங்களை ஒப்பிடும் போது இது கட்டாயம் செய்யப்பட வேண்டிய ஒன்று என மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அமைச்சர் காஞ்சன விஜேசேகர இவ்வாறு தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் மற்றும் தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்காக 7600 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை செலுத்த வேண்டும் என கூறினார்.

மேலும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு மட்டும் செலுத்த வேண்டிய தொகை 3100 கோடி ரூபாய் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதிலும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மின்சார சபையினால் செய்யக்கூடிய சில பணிகள் வேறு திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டிருந்ததாக தெரிவித்த அமைச்சர் சபையில் உள்ள மாபியாக்களை எதிர்த்து தாம் தனித்து நின்று போராடிய சந்தர்ப்பங்களும் உண்டு எனவும் தெரிவித்தார்.

மின்சார சபை மற்றும் பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபன ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாகவும், இந்த நிறுவனங்கள் எவ்வித சேவை மதிப்பீடும் இன்றி வருடாந்தம் 25 வீத சம்பள அதிகரிப்பை ஊழியர்களுக்கு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.