இன்று(15) முதல் நாளாந்த மின்வெட்டு நேரம் நீடிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாவது தொகுதியில் 2 மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்ததன் காரணமாக மின்வெட்டை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை சற்றுமுன் அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளது

இதன்படி இன்றைய தினம் முதல் 3 மணித்தியாலங்களுக்கு தினசரி மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

எவ்வாறாயினும், இன்றும் நாளையும் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்கள் மட்டுமே மின்வெட்டு அமுலாகும் என நேற்று (14) பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்தது.

எனினும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயலிழப்பு மின்வெட்டு நேர மாற்றத்தில் தாக்கம் செலுத்தியுள்ளது.

இன்று காலை நுரைச்சோலை அனல்மின் நிலையம் திடீரென பழுதடைந்ததையடுத்து, நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாவது தொகுதி செயலிழந்துள்ளதாகவும், தொழில்நுட்ப ஊழியர்கள் தற்போது கோளாறை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதேவேளை, மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது தொகுதியில் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அனல்மின் நிலையத்தின் மூன்றாவது தொகுதி தொடர்ந்து இயங்குவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.