மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நாட்டிலிருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடுத்த வாரம் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, CNN செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ நாடு திரும்புவதில் இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக எந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும், அவர் இராஜதந்திர மார்க்கமாக நாடு திரும்புவார் எனவும் அமைச்சர் கூறினார்.

அவர் இலங்கையின் குடிமகன், அவர் விரும்பியவாறு பயணம் செய்யலாம்” என்றும் அலி சப்ரி கூறினார்.

முன்னாள் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ இராஜதந்திர கடவுச்சீட்டைக் கொண்டுள்ளதால், 90 நாட்கள் வரை தாய்லாந்தில் அவருக்கு தங்கியிருக்க முடியுமென தாய்லாந்து பிரதமர் முன்னதாக தெரிவித்தார்.

தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியுள்ள கோட்டாபய, எதிர்வரும் 24ஆம் திகதி நாடு திரும்புவார் என்று, ராஜபக்ஷவின் உடன்பிறவா சகோதரரும், ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதருமான உதயங்க வீரதுங்க, செய்தியாளர்களிடம் நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.