இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று புது டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இடம்பெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 9 ஆவது முறையாக இன்று சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி ஏற்றியுள்ளார்.
அடிமைத்தனத்தை முழுமையாக இல்லாது ஒழிப்பதோடு, நாட்டின் வளர்ச்சியை நோக்கி அனைவரும் செயற்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின விழாவின் போது உரையாற்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.