உள்நாட்டு எரிவாயு விலையை திங்கட்கிழமை (8) முதல் கணிசமான அளவு குறைப்பதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை குறைப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விற்பனை விலை அண்மையில் 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதுடன், தற்போதைய விலை 4,910 ரூபாவாகக் காணப்படுகின்றது.
மேலும் மக்கள் உணரும் வகையில் விலை குறைக்கப்படும், புதிதாக தயாரிக்கப்பட்ட புதிய விலைச் சூத்திரத்தினால் எரிவாயுவின் விலை குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை 20 நாட்களில் 22 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.