குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை பிணையில் விடுவிப்பது அவசியமில்லை எனவும், அடுத்த நீதிமன்றத் தினத்தில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினால் போதும் எனவும் கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இன்று (18) உத்தரவிட்டுள்ளார்.

2007 ஆம் ஆண்டு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேர்வின் சில்வார, இன்று கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்போது, மேர்வின் சில்வா அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகினால் போதுமானது எனவும் உத்தரவிடப்பட்டது.

Tamil Mirror 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.