(அஷ்ரப் ஏ சமத்)

கொழும்பு மாவட்டத்தில் மகரகம மாநகர சபைக்குட்பட்ட நகரில்  கபூரியா அரபுக்  கல்லுாாியை கொடை வல்லல் காலம் சென்ற என்.டி.எச் அப்துல் கபூர் அவா்களினால் 1931ல் ஆரம்பிக்கப்பட்டு்ளளது. 

இக் கல்லுாரிக்கு தற்பொழுது வயது 91 ஆகும்.  இக் கல்லுாாியில் கற்றவா்களது பட்டத்தில் (கபூரி) என பட்டம் வழங்கப்பட்டு இருக்கும்.

 அந்த அளவுக்கு  இக் கலாசாலை மிகவும் பழைமைவாய்ந்ததும், முஸ்லிம்களின் மாா்க்கக் கல்வியின் முதுபெரும் முதுசமாகும்

இக் கலாசாலை கற்றவா்கள்  உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்  சிறந்த மாா்க்கக் கலிவமான்களாக விளங்குகின்றனா். அத்துடன்   மிக அரபு குர்ஆண் மத விவகாரத்தில் பாண்டித்தியம் பெற்று முஸ்லிம்களுக்கு உலமாக்களாக தலைமை வகித்து வழிகாட்டி வருகின்றனா்.

 அதனைத் தொடா்ந்து அவா்கள்  மாா்க்கக் கல்வியின் பட்டப்படிப்பினை தொடா்ந்துள்ளனா்.  நாட்டின் நாலா பாகத்திலிருந்து உலகக் கல்வியோடு குர்ஆணையும் 7 வருடங்கள் கற்று  அதனைச் சுமந்து  கற்று வெளியேறியவா்கள்   ஆயிரக் கணக்கில் உள்ளனா்.

.  இந்த அரபுக் கல்லுாாியை  உருவாக்க காரணமாயிருந்தவரின் என்னக்கருவுக்கு வித்தியாசமான முறையில் திடிரென 90 வருடத்திற்குப் பிறகு காலம் சென்ற கபூர் ஹாஜியின்  4வது ஜேனரேசன் பரம்பரை  முறையில் வந்தவர் தான்  அஸ்மத் கபூர்  இவா் இக் காணியின் அரைவாசியை விற்பதற்கும் சொப்லொஜி  கம்பனிகளி இக் காணியில  கம்பனிக்கான ஹோட்டல்கள்,  கட்டங்கள் கட்டுவதற்கும் முயற்சித்து வருகின்றன.

அதற்காக பழைய மாணவ சங்கத்தினா் இதற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செ்ய்துள்ளனா். அவ் வழக்கு நடைபெற்று வருகின்றது.

இங்கு பயின்ற  ஆயிரக்கணக்கான கபூரிகள் நாட்டின் உஸ்தாதுகள்,  மௌலவிகள், அதிபா்கள், ஆசிரியா்கள் உலமாக்கள்,  என மாா்க்கரீதியாக கடமைகளுடன் வேறு சிலா்  உயா் பதவிகளை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ளவா்கள் இக் கல்லுாாியையும் இதன்  சொத்துக்களையும் பாதுகாக்கும் கைங்கரியத்தில் இறங்கியுள்ளனா்.

இவ்கல்வி ஆண்டிலும்  இங்கு 80 மாணவா்கள் உள்ளனா். இக் அரபிக் கல்லுாாியில் அமைந்துள்ள மகரகமவில் நகரில்  35 ஏக்கா் காணி விஸ்தீரனம் கொண்டுள்ளது.     இக் காணியில்  17 அரை ஏக்கா் அரபுக் கல்லுாாிக்கும் மிகுதி  17 அரை ஏக்கா் காணி  கொழும்பு சாஹிராக் கல்லுாாிக்கும் காலம் சென்ற வர்த்தகா்  என்.டி.எச் அப்துல் கபூரினால் (வக்பு) நன்கொடை செய்யப்பட்டுள்ள்து. இது முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் உள்ள வக்பு சபையின் கீழ் பதியப்பட்டுள்ளது. 

அத்துடன் இக் கல்லுாாியில் கற்கும் மாணவா்களுக்கு  இக்கல்லுாாியின் நூர்தீன் ஹாஜியார் அப்துல் கபூர் அவர்கள் மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியை ஆரம்பித்து, அதனை நடாத்திச் செல்வதற்கான முக்கிய வருமான வழியாக கிரேன்ட் பாஸ் வீதியில் காணியொன்றை கொள்வனவு செய்து, அங்கு தனியார் மருத்துவமனையொன்றை நிறுவியுள்ளார். 

கபூர் ஹாஜியார் தனது சொந்த மைத்துனரான டொக்டர் சுலைமானுடன் இணைந்து   சுலைமான் மருத்துவமனை என்ற பெயரில் குறித்த காணியில் அந்தத் தனியார் மருத்துவமனையை நிர்மாணித்திருக்கிறார். இந்த மருத்துவமனையின் மூலம் பெறப்படுகின்ற வருமானத்தின் மூலம் கபூரிய்யா அரபுக் கல்லூரியை இயங்க வைப்பதே அவர்களது குறிக்கோளாகக் காணப்பட்டது.

(இக் கல்லுாாியை ஆரம்பித்த கபூர் ஹாஜியாா்  அடிக்கடி அவா் தனது காரில் அங்கு விஜயம் செய்வதுண்டு . ஒரு  முறை என்.டி.எச். அப்துல் கபூர் அக் கல்லுாாிக்குச் சென்றபோது அங்கு அன்னாசி கன்றுகள்  வளா்ந்து காய்த்து இருந்தாகவும் அதனை அவா் பாா்த்தாகவும்  அவருக்குத் தெரியாமல்  2 அண்னாசிப் பழங்களை அவரது காரில் வைக்கப்பட்டுள்ளன. அதன் பின்னா் அவரது வீட்டில்  அவரது மனைவி அதனை வெட்டி வைத்ததும்  இப் பழங்கள் ஏது ? எனக் கேட்டுள்ளளா் 

 தனது மனைவி பதிலளிக்ககையில்  உங்கள் காரில் இருந்தே எடுத்தேன் என்றதாகவும்  அதனை அவா்  உணணவில்லையாம் .எனவும் மீண்டும ஒரு முறை அரபுக் கல்லுாிக்கு வருகை தந்தவா்  இக்கலாசாலைக்காக என்னால் நன்கொடை  (வக்பு) செய்யப்ட்டதில் இருந்து எந்தவெதரு பொருளும் எனக்கு வேண்டாம் .இக் கல்லுாறியிலிருந்து அல்லது காணியில் வரும் வருமானங்கள் இங்கு  கற்கும் மாணவா்களுக்கே அது செல்லல் வேண்டும் என கூறியதாகவும் கல்லுாாியின்  குறிப்பு புத்தகத்தில் உள்ளதாகவும் பழைய மாணவா் செயலளாா் தெரிவித்தாா்.  அதன் பின்ா் 1948 ல் கபூர் காலமாகியுள்ளாா்.

தற்பொழுது என்.டிஎச்.அப்துல் கபூரின் 4 வது தலைமுறை எனச் சொல்லி வெளிநாட்டில் கல்வி கற்றவா் இக் கல்லுாாியை 3 கம்பனிகளுக்கு நிரந்தர கட்டிடங்கள் அமைப்பதற்கு கல்லுாாியை இடைமறித்து நீண்ட சுவர் அமைத்துள்ளாா். அத்துடன் அங்குள்ள மத்ரசா மாணவா்கள் சில கட்டிடங்கள் விடுதி , குடிதண்னீா் அங்கு பாவிக்க முடியாது போகியுள்ளது. கடந்த வாரம் கூட  வெள்ளிக்கிழமை   ஜம்ஆத்  தொழுகையும் நடைபெற முடியாமல் இருந்துள்ளது. பின்னா் தொழுவதற்காக அவரது அனுமதியின் பேரில்  பாதுகாப்பு அதிகாரியினால் திறக்கப்பட்டுள்ளது.

 தற்பொழுது இக்கல்லுாிக்கு   பாதுகாப்புச் சுவா் அமைத்து பாதுகாப்பு அதிகாரிகளையும் நியமித்துள்ளா்ா.  கபூர் குடும்பத்தின் சொத்துக்கள்  கொழும்பில் பல இடங்களிலும் இருந்துள்ளன.அரசாங்கம் பல காணிகள் கட்டிடங்களை சுவிகரித்துள்ளது. பண்டாரவலை சென்தோமஸ் கல்லுாாி, காணி கூட கபூர் வழங்கியது.  கொழும்பு துறைமுக அதிகார சபைக்கு முன்னால் உள்ள ஹோட்டல்கள், கட்டிடங்களை நகர அபிவிருத்தி அதிகார சபை அபகரித்துள்ளது. இரானுவத்தினா் அதனை மீள வடிவமைத்து வருகின்றனா். அதற்குச் சொந்தக் காரா் யாா் என்று தெரியாமல் உள்ளது  இவற்றில கரிசனை காட்டாமல்   வக்பு செய்யப்பட்ட  காணியை 4வது தலைமுறை என்பவா் இச் செயல்களினைச் செய்து வருகின்றாா். என முன்னாள் ஆளுனா் அசாத் சாலி தெரிவித்தாா் .

கிராண்பாஸ்   சுலைமான் வைத்தியசாலை சொப்டேலேஜ் கம்பனியில் இருந்து தற்பொழுது ஓடேல் கம்பனி ஒரு பாரிய ஹோட்டல் ஒன்றை கட்டுவதற்கு விற்கப்பட்டுள்ளது. அதன் பின்னா் தற்பொழுது மகரகமவிற்கு வந்து அரபு காலாசாலையின் காணியை விற்பதற்கும் கம்பனி , ஹோட்டல்களை அங்கு நிர்மாணிக்கவும் அதனை  குத்தகைக்கு விடுப்பதற்கும்  இந்நபா் முயற்சி எடுத்து வருகின்றாா்.

இவ் விடயம் சம்பந்தமாக பழைய மாணவா்கள் ஏற்கனவே நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து வழக்கு நடைபெற்று வருகின்றது.  இதற்கு முஸ்லிம்களின் காணிகள் சொத்துக்கள் அபகரிக்கும் கைங்கரியத்தி்ல் அண்மையில் விலகிய ஜனாதிபதியின் கும்பல் ஒன்று இருந்து வந்தது. அவா்களின் உதவி. ஒத்தாசைகள் இந் நடவடிக்கைக்கு உதவியிருக்கலாம்.   எனவும அசாத் சாலி தெரிவித்தாா்.

  இவ் விடயம் சம்பந்தமாக பழைய மாணவா்கள், மற்றும் உலமா சபை, முஸ்லிம் சயம பண்பாட்டுத் திணைக்களத்தின் வக்பு சபை ,முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பிணா்கள் நேற்று முன்தினம் 17 வெள்ளவத்தை மியாமி வரவேற்பு மண்டபத்தில் ஒன்று கூடியிரந்தாா்கள்.  கபூரியாவின்  இக் காணியையும் சொத்துக்களையும்  காப்பாற்றுவதற்கு சகல முஸ்லிம்களும் முன்வருமாறு பழைய மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா்

இன்று 18 கொழும்பு 2 நிப்போன் ஹோட்டலில் முன்னாள் ஆளுனா் அசாத் சாலி, என்.எம் அமீன், பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான், சட்டத்தரனி ருஸ்தி ஹபீப், பழைய மாணவ செயலாளா் தில்சாத் முஹம்மத் ஆகியோா்கள் இணைந்து இவ் விடயத்தினை பொதுமக்களுக்கும் அரசாங்கத்துக்கும் தெளிவு படுத்து முகமாக ஓர் ஊடக மாநாடை நடாத்தி ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தினாா்கள். 

இவ் விடயம் சம்பந்தமாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பிணர்கள், புத்திஜீவிகள், அரசாங்கம் முன்வந்து  கபூரியா அரபு கலாசாலை அதன் காணி சொத்துக்களை பாதுகாக்க முன்வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. 

அத்துடன் அடுத்த வார வெள்ளிக்கிழமை முஸ்லிமகள் ஒன்று கூடி கிராண்பாஸ் உள்ள  சுலைமான் வைத்தியசாலை எதிர்ப்பு ஆர்ப்பாாட்டம் ஒன்றை நடத்தவும் அசாத சாலி அழைப்பு விடுத்தார்,  என். டி.எச் அப்துல் கபூர் குடும்பத்தினை அழைத்து இவ்விடயமாக கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வருதல் 4 வது தலைமுறை அஷ்மத் கபூர் மட்டும் இச் செயலில் இறங்கியிருப்பதனையிடடு அவா்கள் கருத்து தெரிவிக்க வேண்டும்.  எனவும் அசாத் சாலி கருத்து தெரிவித்தார்.








கருத்துரையிடுக

Blogger இயக்குவது.