சர்வகட்சி அரசாங்கத்துக்கு அழைப்பு விடுப்பது நிலக்கரி மோசடி டொலர்களைப் பகிர்ந்து கொள்ளவா? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேள்வி எழுப்பினார்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கி சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு அழைப்பு விடுப்பது நுரச்சோலை நிலக்கரி அனல்மின் நிலைய ஊழலின் ஊடாக பெறப்பட்ட டொலர்களை பகிர்ந்து கொள்வதற்காகவா என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

மக்கள் பாரிய துன்பங்களை அனுபவித்தாலும் அரசாங்கம் இவ்வாறான மோசடிகளை மேற்கொண்டு நாட்டை மேலும் அதல பாதாளத்துக்குள் இழுக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த விடயங்களை அவர்களது உறவினர்களின் கட்சியோ அல்லது உறவினர்களின் ஊடகங்களோ கண்டுகொள்வதில்லை எனவும் தெரிவித்தார்.

மின் கட்டண உயர்வை கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (29) பாராளுமன்றத்திற்கு முன்பாக அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.