நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு நெருக்கடிக்கு தீர்வாக, கொழும்பு மாநகர சபை வளாகத்தில் தோட்டப் பயிர்ச் செய்கையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபை மேயர் ரோஸி சேனாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த பயிர்ச் செய்கையை முன்னெடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பயிர்ச் செய்கை நடுவதற்காக கொழும்பு மாநகர சபை ஊழியர்களால் நிலத்தை பதப்படுத்தி பயர்ச் செய்கைக்கு தயார்ப்படுத்தும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்க முடிந்தது.

இந்நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் முடிந்தளவு சிறுதோட்டப் பயிர்ச் செய்கைகளில் ஈடுபடுவதற்கு தேவையான வசதிகள் அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பயனை மக்கள் பெற்றுக்கொள்ளும்படி பொது மக்களை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தப் பயிர்ச் செய்கைக்கு தேவையான உதவிகளையும் ஆலோசனைகளையும் பெறுவதற்கு பொது மக்களுக்கு முடியும். இதன் மூலம் மக்கள் தங்களுக்குத் தேவையான தக்காளி, பூசிணிக்காய், கத்தரிக்காய், மிளகாய் உள்ளிட்ட பயிர்ச் செய்கைகளில் ஈடுபடும்போது மேலதிகமாக வருமானம் ஈட்ட முடியும் என்பதுடன், தங்களது செலவுகளையும் குறைத்துக் கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.