சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார்.

இதனடிப்படையில் பணியாளர் அளவிலான உடன்படிக்கையான முதல் மைல்கல்லை விரைவில் அடைய முடியும் என்று தாம் நம்புவதாக மத்திய வங்கியின் தலைவர் கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையை இன்று முன்வைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்திருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதனையடுத்து நாட்டிற்கு கடன் உதவி வழங்கும் பிரதான நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.